மேலும் செய்திகள்
மாணவர்களுக்கு சாலை விழிப்புணர்வு
22-Dec-2024
அரியாங்குப்பம்: சிறுவர்கள் வாகனங்கள் ஓட்டி விபத்து ஏற்படுத்தினால், சிறை தண்டனையுடன், அபராதம் விதிக்கப்படும் என, தெற்கு போக்குவரத்து எஸ்.பி., மோகன்குமார் எச்சரித்துள்ளார்.அரியாங்குப்பத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, பைக் ஓட்டி வந்த சிறுவன் பஸ் மோதி இறந்தார். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. அதனையடுத்து, 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தினால், மோட்டார் வாகன சட்டம் 1988 பிரிவு 199(ஏ)- கீழ் சிறுவனின், பெற்றோர் அல்லது பாதுகாவலர் அல்லது, வாகனத்தின் உரிமையாளருக்கு 3 மாதம் சிறை தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் - அபராதம் விதிக்கப்படும்.18 வயதுக்கு குறைவான சிறுவர்கள் வாகனங்களை இயக்குவது குற்றமாகும். மீறி, சிறுவர்கள் வாகனங்களை இயக்கி விபத்து ஏற்பட்டால் அவர்களுக்கு 25 வயது வரை மோட்டார் வாகனங்கள் இயக்குவதற்கான உரிமம் பெற முடியாது.எனவே, மோட்டார் வாகனங்களை சிறுவர்கள் ஓட்டுவதற்கு, பெற்றோர் அனுமதிக்கக் கூடாது. 18 வயது பூர்த்தியானவுடன் மோட்டார் வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றுத் தருவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.இவ்வாறு போக்குவரத்து எஸ்.பி., மோகன்குமார் தெரிவித்துள்ளார்.
22-Dec-2024