உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஜிப்மர் மருத்துவர்கள் ஊழியர்கள் விடுமுறை ரத்து

ஜிப்மர் மருத்துவர்கள் ஊழியர்கள் விடுமுறை ரத்து

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மரில் தற்போதைய அவசர நிலையை கருத்தில் கொண்டு துறை தலைவர்களுடன் அவசரக்கால கூட்டம், இயக்குனர் வீர் சிங் நேகி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் இயக்குனர் வீர் சிங் நேகி கூறுகையில், 'எல்லையில் நிலைமை மேலும் மோசமடைந்து பெரிய அளவிலான தாக்குதல்கள் நடந்தால், மருத்துவம், அறுவை சிகிச்சை, அவசர மருத்துவம், மயக்க மருந்து, குழந்தை மருத்துவம், மகப்பேரியல் மற்றும் மகளிர் மருத்துவம் உள்ளிட்ட உயர் மருத்துவ குழு அமைக்கப்பட்டிருக்கிறது. தேவைப்படும் நேரத்தில் இவர்கள், ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய மாநில எல்லைகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு இந்திய அரசாங்கத்தால் அனுப்பப்படலாம். புதுச்சேரியில் கடல் வழித் தாக்குதல் ஏற்பட்டால், ஜிப்மரின் பேரிடர் குழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இது பல்வேறு மருத்துவ பிரிவுகளை கொண்ட அவசரகால குழுவினரால் அமைக்கப்பட்டுள்ளது.மேலும், இந்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில், ஜிப்மர் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களின் அனைத்து விடுமுறையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அவசரகால சூழலில் ஜிப்மரில் மருத்துவ மற்றும் துணை மருத்துவ ஊழியர்கள் இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் படி, இந்தியாவில் எங்கும் பணியமர்த்தப்படுவர். தயார் நிலையில் இருக்க வேண்டும் என, தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ