மேலும் செய்திகள்
குடிநீர் குழாய் அமைக்கும் பணி
17-May-2025
நெட்டப்பாக்கம்: மாநில அளவில் நடந்த கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு துணை சபாநாயகர் ராஜவேலு பரிசுகள் வழங்கி வாழ்த்தினார்.மடுகரை ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் மடுகரை கிராம மக்கள் இணைந்து முதலாமாண்டு மாநில அளவிலான கபடி போட்டி மடுகரை முத்துமாரியம்மன் விளையாட்டுத் திடலில் நடத்தினர். போட்டியினை வைத்திலிங்கம் எம்.பி., துவக்கி வைத்தார். துணை சபாநாயகர் ராஜவேலு முன்னிலை வகித்தார். போட்டியில் புதுச்சேரி மற்றும் தமிழக பகுதியில் இருந்து 50க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.இறுதி போட்டியில் ராம்பாக்கம் அணியும், மடுகரை அணியும் மோதின. மடுகரை அணி முதல் பரிசு பெற்றது. வெற்றி பெற்ற அணிக்கு துணை சபாநாயகர் ராஜவேலு ரொக்கம், கோப்பை, சைக்கிள் வழங்கினார். நிகழ்ச்சியில் என்.ஆர்.காங்., பிரமுகர் பிரித்திவிராஜன், அரிகிருஷ்ணன், புதுச்சேரி மாநில கபடி சங்கம் துணைத் தலைவர் கீதா வேலழகன் கலந்து கொண்டனர்.
17-May-2025