| ADDED : பிப் 10, 2024 06:23 AM
புதுச்சேரி : கதிர்காமம் முத்துமாரியம்மன் கோவிலில் பக்தர்கள் செடல் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.புதுச்சேரி, கதிர்காமம் முத்துமாரியம்மன் கோவில் செடல் திருவிழா கடந்த வாரம் துவங்கியது. தினமும், இரவு அம்மன் வீதியுலா நடந்தது.நேற்று முக்கிய நிகழ்வான செடல் திருவிழா நடந்தது. திரளான பக்தர்கள், செடல் அணிந்து நேர்த்தி கடன் செலுத்தி அம்மனை வழிப்பட்டனர்.இரவு புஷ்ப விமானத்தில் அம்மன் வீதியுலா நடந்தது. இன்று, இளைஞர்களின் உற்சவ நிகழ்ச்சி மற்றும் கோலாப்போட்டி நடக்கிறது.முன்னதாக, நடந்த சிறப்பு பூஜையில், முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம், எதிர்க்கட்சி தலைவர் சிவா, ரமேஷ் எம்.எல்.ஏ., உட்பட பலர் பங்கேற்றனர்.செடல் திருவிழாவையொட்டி, அந்த வழியாக போக்குவரத்து மாற்று வழியில் திருப்பிவிடப்பட்டது. வடக்கு எஸ்.பி., பக்தவச்சலம் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர். அமைச்சர் நேர்த்திக்கடன்
முத்துமாரியம்மன் கோவில் செடல் திருவிழாவில், ஆண்டுதோறும் அமைச்சர் நமச்சிவாயம் செடல் அணிந்து நேர்த்தி கடன் செலுத்தி வருகிறார். 21வது ஆண்டாக நேற்றும் அவர் தனது மனைவி, மகன் ஆகியோருடன், செடல் அணிந்து நேர்த்தி கடன் செலுத்தி, அம்மனை வழிப்பட்டனர்.