உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காங்., தி.மு.க.,வுக்கு பல கோடி நிதி; லாட்டரி அதிபர் வழங்கினார் கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., திடுக் புகார்

காங்., தி.மு.க.,வுக்கு பல கோடி நிதி; லாட்டரி அதிபர் வழங்கினார் கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., திடுக் புகார்

புதுச்சேரி : தேர்தல் செலவுக்கு லாட்டரி அதிபரிடம் காங்., தி.மு.க., பணம் பெறவில்லையா என பா.ஜ., எம்.எல்.ஏ., கல்யாணசுந்தரம் கேள்வி எழுப்பியுள்ளார். அவர், கூறியதாவது:காமராஜ் நகர் தொகுதியில் நடந்த விழாவில், தொழிலதிபர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பங்கேற்றார். விழாவில் பங்கேற்ற எம்.எல்.ஏ.,க்கள் குறித்து காங்., தி.மு.க., கட்சிகள் விமர்சிக்கின்றன. அக்கட்சிகளுக்கு ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பல கோடி தேர்தல் நிதி பத்திரம் மூலம் வழங்கியுள்ளார்.முன்னாள் முதல்வர் நாராயணசாமி, 2016ம் ஆண்டு நரி தந்திரத்தை பயன்படுத்தி அமைச்சர் பதவி தருவதாக ஆசை காட்டி ஜான்குமாரை ஏமாற்றினார். அவர் கொல்லைப்புறமாக முதல்வர் பதவியில் அமர்ந்தார்.வைத்தியலிங்கம், எதிர்க்கட்சி தலைவர் சிவாவும் விமர்சனம் செய்கின்றனர். ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தி.மு.க.,வுக்கு பல கோடி தேர்தல் நிதி வழங்கியுள்ளார். தேர்தல் பத்திரங்கள் மூலம் தேர்தல் நிதி பெற்றதை நிருபித்தால் அவர்கள் பதவியை ராஜினாமா செய்ய தயாரா.காங்., ஆட்சியில் லாட்டரி வியாபாரம் கொடிகட்டி பறந்தது. அப்போது வாய் திறக்காத முன்னாள் முதல்வர் நாராயணசாமி, தற்போது அரசியல் நாகரிகம் இழந்து பேசுவதை கண்டிக்கிறோம்' என்றார். பேட்டியின்போது பா.ஜ., எம்.எல்.ஏ., ஜான்குமார், சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் அங்காளன், சிவசங்கரன் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ