/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆலங்குப்பம் ஏரி சுற்றுலாத்தலம் கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
ஆலங்குப்பம் ஏரி சுற்றுலாத்தலம் கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
புதுச்சேரி : சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது நடந்த விவாதம்கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., (பா.ஜ): சர்வதேச நகர் அமைந்துள்ள ஆரோவில் அருகே ஆலங்குப்பம் ஏரி 26 ஏக்கர் பரப்பளவில் அமைத்துள்ளது. இந்த பெரிய ஏரியை சுற்றுலாத்தலமாக்க வேண்டும்.அமைச்சர் லட்சுமிநாராயணன்: சுதேஷ் தர்ஷன் 2.0 திட்டத்தின் கீழ் புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சிக்கான மூலத் திட்டத்தின் இரண்டாம் செயல்முறையில் ஆலங்குப்பம் ஏரி மேம்பாட்டு திட்டத்தை சேர்ப்பதற்கு ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வின் அடிப்படையில் இந்த திட்டம் சேர்க்கப்பட்டுள்ளது.விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியும் நடந்து வருகிறது.