மேலும் செய்திகள்
பிஜி., கமிஷனர், மியான்மர் துாதருடன் அமைச்சர் ஆலோசனை
2 minutes ago
அரசு ஊழியர்களுக்கு 5 சதவீதம் அகவிலைப்படி உயர்வு
3 minutes ago
புதுச்சேரி: பணத்திற்காகவும், என் மீதான குற்றங்களை மறைக்க நான் அரசியலுக்கு வரவில்லை என, செந்திலுக்கு, கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., பதிலடி கொடுத்துள்ளார். காலாப்பட்டு தொகுதி எம்.எல்.ஏ., கல்யாணசுந்தரம் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: அர்ஜூனகுமாரி அறக்கட்டளை நிர்வாகி செந்தில் என்மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். செந்தில் மீது 20க்கும் மேற்பட்ட வழக்கு உள்ளது. இவர், கடந்த 11ம் தேதி கொலை குற்றவாளிகள் உள்ளிட்ட 70 பேருடன் கம்பெனிக்குள் புகுந்து பெண்களை மிரட்டிவிட்டு, தற்போது தொகுதி இளைஞர்களுக்கு வேலை கேட்க சென்றதாக கூறுவது பொய். நான் ஆரம்பத்தில் இருந்து பா.ஜ.,வில் தான் உள்ளேன். 2006ல் பா.ஜ., சார்பில் தேர்தலில் போட்டியிட்டேன். 2011ல் தேர்தலில் முதல்வர் ரங்கசாமி அழைத்ததால் அவரது கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சராக இருந்தேன். தற்போது மீண்டும் தாய் கட்சிக்கு வந்துவிட்டேன். நான் கடந்த 2016ல் சுயேச்சையாக போட்டியிட்ட என்னிடம், செந்தில் சமுதாய பேரியக்கம் பெயரை கூறி பணம் கேட்டார். கடந்த தேர்தலில் கூட செந்தில், என்னிடம் விலை பேசினார். அதற்கும் ஆதாரம் உள்ளது. நான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். எனக்கு 4 ரிசார்ட் உள்ளது. எனக்கு 17 தொழில் உள்ளது. நான் விளையாட்டு வீரர். சர்வதேச போட்டிக்கு தகுதி பெற்றவன். நான் 10ம் வகுப்பு தோல்வி அடைந்ததும், புதுச்சேரி 100 அடி சாலையில் ஆட்டோமொபைல்ஸ் தொழில் தொடங்கினேன். எனது கடையை, முதல்வர் தான் திறந்த வைத்தார். நான் அரசியலுக்கு வரும் போது எனது கடையில் ரூ. 5 கோடிக்கு பொருட்கள் இருந்தது. நான் வாங்கிய கிங்ஸ் பார்க் ஓட்டலில், ஏதாவது வழக்கு இருக்கிறது என்பதை நிருபித்தால், அரசியலை விட்டே செல்கிறேன். செந்திலால் கூற முடியாது. பணத்திற்காகவும், என்மீதான குற்றங்களை மறைக்க நான் அரசியலுக்கு வரவில்லை. எனது தொகுதியில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி உள்ளேன். பல கோவில்களை புனரமைத்து கொடுத்துள்ளேன். வரும் தேர்தல் களத்திற்கு அவர் வரட்டும். பார்த்து கொள்கிறேன். அவர் என்ன ஓட்டு வாங்குகிறார் என்பதை பார்ப்போம். சார்லஸ் மார்ட்டின் பா.ஜ.,வில் பொறுப்பில் இருந்தவர். நண்பர் என்ற முறையில் அவரை சந்திக்கிறேன். ஜெகத்ரட்சகன் எனது உறவினர். அதனால் அவரிடம் எப்பொழுதும் போல் பழகி வருகிறேன். என்மீது செந்தில் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு நான் பதில் கூற தயார். அவரால், என் கேள்விகளுக்கு பதில் கூற முடியாது. அவரது மிரட்டலுக்கு எல்லாம் பயந்தவன் நான் கிடையாது' என்றார்.
2 minutes ago
3 minutes ago