உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காரைக்கால் கர்னிவெல் திருவிழா கலெக்டர், அதிகாரிகள் ஆலோசனை

காரைக்கால் கர்னிவெல் திருவிழா கலெக்டர், அதிகாரிகள் ஆலோசனை

புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில், வரும் 14ம் தேதி முதல் 17ம் தேதி வரை கார்னிவெல் திருவிழா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் குலோத்துங்கன் தலைமையில் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கூட்டத்தில், கார்னிவெல் திருவிழா, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நான்கு நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சி உள்விளையாட்டு அரங்கிலும், சில போட்டிகள் கடற்கரையிலும் நடைபெரும். இதில் சாலையோர கண்காட்சி, மலர் கண்காட்சி, நாய் கண்காட்சி, உணவு திருவிழா மற்றும் பீச் வாலிபால், கபடி, படகு போட்டி, ரேக்ளாரேஸ், மாரத்தான் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடக்கிறது.விழா ஏற்பாடுகள் மற்றும் பொதுமக்கள் எவ்வித சிரமமும் இல்லாம் கண்டுக்களிக்க ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை நடத்தினார்.விழாவில் கவர்னர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர்.இதனால் விழா நடைபெறும் உள்விளையாட்டு அரங்கில் உள்ள மைதானத்தை 5க்கு மேற்பட்ட பெக்லைன் இயந்திரம் மூலம் சுத்தப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை