கவர்னருக்கு நன்றி தெரிவித்த காரைக்கால் மீனவர்கள்
புதுச்சேரி : இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு, விடுவிக்கப்பட்ட காரைக்கால் மீனவர்கள், கவர்னர் கைலாஷ்நாதனை சந்தித்துநன்றி தெரிவித்தனர்.காரைக்கால் மீனவர்கள் உட்பட 13 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். அதில் ஒரு மீனவருக்கு காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து காயமடைந்தார்.அவருக்கு முழு மருத்துவ சிகிச்சை அளிக்கவும், கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும்,கவர்னரை சந்தித்து கேட்டுக் கொண்டனர்.அதன் அடிப்படையில் மத்திய அரசு மேற்கொண்ட துரித நடவடிக்கை காரணமாக மீனவர்கள் விடுவிக்கப்பட்டு, விமானம் மூலமாக சென்னை வந்து,குண்டு அடிப்பட்ட மீனவர் சிகிச்சைக்காக, சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மற்றவர்கள் சொந்த ஊர் திரும்பினர். மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்த, கவர்னர் கைலாஷ்நாதனை மீனவ பஞ்சாயத்து குழுவினர் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.அப்போது எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக எழும் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி உள்ளதாகவும், காரைக்கால் மீனவர்கள், அந்தமான் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் ஆழ்கடல் மீன்பிடிக்க தொலைநோக்கு செயல் திட்டம் உருவாக்கப்பட்டு வருவதாகவும் கவர்னர் தெரிவித்தார்.மேலும், மீனவர்களின் நீண்ட நாள் கனவுத் திட்டமான ஸ்மார்ட் மற்றும் ஒருங்கிணைந்த மீன்பிடித் துறைமுகம் அமைக்க, பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா (PMMSY) திட்டத்தின் கீழ் ரூ.130 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.விரைவில் இத்திட்டம் காரைக்கால் மீனவ மக்களுக்கு அர்ப்பணிக்கப்படும் என்றார்.