மேலும் செய்திகள்
தேசிய சிலம்பம் சென்னை சிறுவர்கள் சாதனை
28-Jul-2025
காரைக்கால்: புதுச்சேரியில் நடந்த மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் காரைக்கால் மாணவர்கள் சாதனை படைத்தனர். புதுச்சேரி, இந்திராகாந்தி விளையாட்டரங்கில் மாநில அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது. போட்டியில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். அதில், காரைக்கால் நேஷனல் வி.ஆர்.எஸ். கலைத்தாய் சிலம்பம் அசோசியேஷன் நிறுவனர் குமார் தலைமையிலான விளையாட்டு வீரர்கள் 12 பேர் பங்கேற்றனர். இக்குழுவின் முதல் பரிசு 4, இரண்டாம் பரிசு 2, மூன்றாம் பரிசு 6 பெற்று சாதனை படைத்தனர். இவர்களுக்கு சபாநாயகர் செல்வம், பாஸ்கர் எம்.எல்.ஏ., ஆகியோர் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினர். மேலும் கலைத்தாய் சிலம்பம் அசோசியேஷன் நிறுவனர் குமாருக்கு முதல்வர் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.
28-Jul-2025