கராத்தே போட்டி துவக்கம்
புதுச்சேரி: கோர்க்காடு அமரர் வெங்கடரங்க ரெட்டியார் நினைவு கோப்பைக்கான, 45வது மாநில அளவிலான கோஜூ காய் கராத்தே போட்டி, புதுச்சேரி செயின்ட் பேட்ரிக் பள்ளியில் துவங்கியது. இப்போட்டியில், 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான கட்டா பிரிவு கராத்தே போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன. தொடர்ந்து, வரும் 9ம் தேதி சீனியர் மாணவ, மாணவிகளுக்கான போட்டியும், பரிசளிப்பு விழாவும் நடக்கிறது. இதில், புதுச்சேரி, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொள்கின்றனர். இப்போட்டியில் வெற்றி பெறும் 10 மாணவர்களுக்கு 'கருப்பு பட்டை' மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது. போட்டிக்கான ஏற்பாடுகளை கராத்தே பயிற்றுனர் ஜோதிமணி உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.