உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  கருவடிக்குப்பம் குளம் பராமரிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

 கருவடிக்குப்பம் குளம் பராமரிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

புதுச்சேரி: கருவடிக்குப்பம் குளத்தை துாய்மையாக பராமரிக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. உழவர்கரை நகராட்சி, கருவடிகுப்பம் லாஸ்பேட்டை சாலையில் உள்ள பிள்ளையார் கோவில் குளத்தினை அம்ருத் திட்டம் மற்றும் நகராட்சி நிதியின் மூலம் ரூ. 1.10 கோடி செலவில் துார்வாரி, மறுசீரமைப்பு செய்து, குளத்தைச் சுற்றி நடை பாதைகள், கைப்பிடிகள் மற்றும் அமர்வதற்கான இருக்கைகள் அமைக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. குளத்தினை துாய்மையாக பராமரிப்பது குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களின் பங்கேற்புடன் விழிப்புணர்வு நிகழ்ச்சி கடந்த 11ம் தேதி நடந்தது. உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் தலைமை தாங்கினார். இதில் பண்டிட் துரைசாமி, ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் புதுச்சேரி பல்கலைக்கழக சமுதாயக் கல்லுாரி முதல்வர், மாணவர்கள், நகராட்சிக்குட்பட்ட மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், அனைவரும் குளத்தினைச் சுற்றி நின்று துணிப்பைகளை ஏந்தி, ஒரு முறை பயன்படும் நெகிழிப் பொருட்களை தவிர்ப்பது, குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என, தரம்பிரித்து அகற்றுவது, சுற்றுப்புறங்களை துாய்மையாக வைத்திருப்பது மற்றும் நீர்நிலைகளை பாதுகாப்பதை வலியுறுத்தி உறுதிமொழி ஏற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

raja
பிப் 14, 2026 07:50

அடுத்து வரும் இளம் தலைமுறைக்கு நம் இயற்கை வளங்களை சிறப்பாக விட்டுச் செல்வதை நமது மிகப்பெரிய சமுதாய பொறுப்பு அதை நாம் பொறுப்புடன் உணர்ந்து பின்பற்ற வேண்டும்


புதிய வீடியோ