உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வழக்கறிஞருக்கு கத்தி வெட்டு

வழக்கறிஞருக்கு கத்தி வெட்டு

புதுச்சேரி : பைக்கை நிறுத்தியதை, தட்டிகேட்ட வழக்கறிஞரை கத்தியால் வெட்டிய, உறவினரை போலீசார் தேடிவருகின்றனர். திலாஸ்பேட்டையை சேர்ந்தவர் சேகர்,65; வழக்கறிஞர். இவர் மனைவி வான்மதியுடன், நேற்று முன்தினம் வெளியில் சென்று விட்டு, காரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். வழியில், இவரது உறவினரான, புகழேந்தி, பைக்கை நிறுத்திருந்தார். பைக்கை ஓரமாக நிறுத்த கூடாதா என அவரை தட்டி கேட்டார். அதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதில், ஆத்திரமடைந்த புகழேந்தி, கத்தியை எடுத்து வந்து, சேகரை வெட்டினார். பலத்த காயமடைந்த அவர் அரசு மருத்துமனையில், சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். வான்மதி, கொடுத்த புகாரின் பேரில், டி.நகர் போலீசார் வழக்குப் பதிந்து, புகேழந்தியை தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ