உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பெயிண்டருக்கு கத்தி குத்து

பெயிண்டருக்கு கத்தி குத்து

புதுச்சேரி : முன்விரோதம் தகராறில் பெயிண்டரை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.உருளையன்பேட்டை, முருகன் கோவில் வீதியை சேர்ந்தவர் மோகன் ஈஸ்வர், 25; பெயிண்டர். இவருக்கும் நெல்லித்தோப்பு ருத்ரேஷ்மணி, 26; என்பவருக்கும் முன்விரோதம் உள்ளது. நேற்று முன்தினம் வேலையை முடித்துவிட்டு, பெரியார் நகர் வழியாக, மோகன் ஈஸ்வர் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அவரை வழிமறித்து, ருத்ரேஷ்மணி தான் வைத்திருந்த கத்தியால் குத்தினார். படு காயமடைந்த, மோகன் ஈஸ்வர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் அளித்த புகாரின் பேரில், உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, ருத்ரேஷ்மணியை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி