கோலமாவு வியாபாரி தற்கொலை
காரைக்கால்: காரைக்காலில் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் கோலமாவு வியாபாரி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.காரைக்கால் எம்.ஜி.ஆர். நகர் அம்மன் கோவில்பத்து பகுதியை சேர்ந்த சுதந்திரம், 43; இவர் கோலமாவு வியாபாரம் செய்து வருகிறார்.இவரது மனைவி மஞ்சுளா இவர்களுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். சுதந்திரம் தினம் மது அருந்துவது வழக்கம். இதனால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் சுதந்திரம் தற்கொலை செய்து கொள்வதாக பலமுறை மனைவியை மிரட்டி வந்துள்ளார். இந்நிலையை நேற்று முன்தினம் மது அருந்திய சுதந்திரம் வீட்டிற்கு வந்தபோது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.இதில் மனமுடைந்த சுதந்திரம் வீட்டில் மின்விசிறியில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து நகர போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.