மேலும் செய்திகள்
மதுபோதையில் விவசாயி தற்கொலை
29-Jul-2026
பாகூர்: கொத்தனார் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாகூர் புதிய காமராஜர் நகரை சேர்ந்தவர் திம்மாச்சி, 40; கொத்தனார். இவருக்கு, சுமதி, 29, என்ற மனைவியும், இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். திம்மாச்சிக்கு மது பழக்கம் இருந்தது. அவரது குடும்பத்தினர் அவரை கண்டித்தால், தனக்கு வாழ பிடிக்கவில்லை என்று கூறி தற்கொலை செய்ய முயன்று வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு திம்மாச்சி குடிபோதையில் சத்தம் போட்டுக் கொண்டிருந்தார். சுமதி, தனது பிள்ளைகள் மற்றும் மாமியாருடன் வீட்டின் மாடியில் உள்ள அறையில் படுத்து துாங்கி விட்டனர். நேற்று காலை 6 மணிக்கு சுமதி கீழ் வீட்டிற்கு வந்து, படுக்கை அறையை திறந்து பார்த்தபோது, திம்மாச்சி துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. புகாரின் பேரில், பாகூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
29-Jul-2026