சோரப்பட்டு கோவில்களில் நாளை கும்பாபிேஷகம்
திருக்கனுார்: திருக்கனுார் அடுத்த சோரப்பட்டு கிராமத்தில் மகா கணபதி, மாரியம்மன், திரவுபதியம்மன், பச்சை வாழியம்மன், பிடாரி அம்மன், பொறையாத்தம்மன், ஐயனாரப்பன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில்கள் புனரமைக்கப்பட்டு, மகா கும்பாபிேஷகம் நாளை(15ம் தேதி) நடக்கிறது. இதற்கான பூஜை நேற்று காலை கணபதி ஹோமத்துடன் துவங்கியது. மாலை வாஸ்து சாந்தி, முதல் யாகசாலை பூஜை நடந்தது. நாளை (15ம் தேதி) காலை 6:30 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை, பூர்ணாஹூதியை தொடர்ந்து கடம் புறப்பாடாகி , காலை 8:15 மணிக்கு விநாயகர்கோவில், 8:45 மணிக்கு பூரணி, பொற்கலை சமேத ஐயனாரப்பன், 9:15 மணிக்கு பிடாரி அம்மன், பொறையாத்தம்மன், 9:50 மணிக்கு திரவுபதியம்மன், மாரியம்மன், 10.15 மணிக்கு பச்சைவாழியம்மன் கோவில் கும்பாபிேஷகம் நடக்கிறது.