உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஏரி பாதுகாப்பு சுவர் அமைக்கும் பணி

ஏரி பாதுகாப்பு சுவர் அமைக்கும் பணி

நெட்டப்பாக்கம்:பனையடிக்குப்பம் ஏரியில் பாதுகாப்பு சுவர் கட்டும் பணியினை துணை சபாநாயகர் ராஜவேலு துவக்கி வைத்தார். நெட்டப்பாக்கம் தொகுதி, பனையடிக்குப்பம் கிராமத்தில், பொதுப்பணித்துறை நீர்பாசன கோட்டம் மூலம் ரூ. 78 லட்சம் செலவில், பெரிய ஏரியின் கிழக்கு கரையில் உள்ள 850 மீட்டர் நீளமுள்ள வெளிப்புறம் பாதுகாப்பு சுவர் கட்டப்பட உள்ளது. இதற்கான பணியினை துணை சபாநாயகர் ராஜவேலு பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் நீர் பாசனம் உட்கோட்டம் மதிவாணன், இளநிலை பொறியாளர் ஜெயராமணன் உட்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை