உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஒளி விளக்கு ஏற்றுதல் நிகழ்ச்சி

ஒளி விளக்கு ஏற்றுதல் நிகழ்ச்சி

புதுச்சேரி: கோரிமேடு, அன்னை தெரேசா பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நல நிறுவன மையத்தில், முதல் ஆண்டு செவிலிய பயிற்சி மாணவர்களுக்கான, ஒளி விளக்கு ஏற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் புல முதல்வர் கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். இந்திராகாந்தி அரசு செவிலியர் கல்லுாரி முதல்வர் பிரமிளா ஏற்புரை வழங்கினார். மருத்துவ கல்லுாரி முதல்வர் திருமுருகன் பங்கேற்றார்.மயிலம் செவிலியர் கல்லுாரி தாளாளர் தமிழ்செல்வி மற்றும் அரசு நெஞ்சக நோய் மருத்துவமனை செவிலிய கண்காணிப்பாளர் சந்திரா, சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து விளக்கினர். உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.தலைமை செவிலிய அதிகாரி சித்ரா, துணை விரிவுரையாளர்கள் கலையரசி, லஷ்மி, நிர்மலா, அனிதா, சிந்து ஆகியோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை