உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / முதியவரை தாக்கிய லாரி டிரைவருக்கு வலை

முதியவரை தாக்கிய லாரி டிரைவருக்கு வலை

புதுச்சேரி : புதுச்சேரி, ரெட்டியார்பாளையம் சர நாராயணா நகர், 2 வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன், 74. அவர் தனது சைக்கிளில் நேற்று நெல்லித்தோப்பிற்கு சென்று கொண்டிருந்தார்.இந்திரா சிக்னல் அருகில், இடப்புறமாக செல்லும் போது, அவருக்கு பின்னால் வந்த லாரி அவரது சைக்கிள் மீது மோதியது. இதில் ராமச்சந்திரன் கீழே விழுந்தார். அப்போது லாரியின் டிரைவர் விழுப்புரத்தை சேர்ந்த சுபாஷ், என்பவர், அவரை தாக்கி கீழே பிடித்து தள்ளினார். இதில் ராமச்சந்திரன் தலையில் அடிபட்டது. இதைத்தொடர்ந்து சுபாஷ் அங்கிருந்து லாரியை ஓட்டி சென்று விட்டார். இந்த புகாரில், ரெட்டியார்பாளை யம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, சுபாைஷ தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை