உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆரோவில்லில் மகா சிவராத்திரி

ஆரோவில்லில் மகா சிவராத்திரி

வானுார், : ஆரோவில் பகுதியில் மகா சிவராத்திரியை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு சிவாலயா நாட்டியாலயம் சார்பில், கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 'சர்ட்டி டூவ்' கால்பந்து மைதானத்தில் இரவு 7:00 மணி முதல் பரத நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. 50க்கும் மேற்பட்ட மாணவிகள், குழு நடனம், தனி நடனம் ஆடினர்.வெளிநாட்டினர், உள்ளூர் வாசிகள் என அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிவாலயா நாட்டியாலய நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ