உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மகாத்மா காந்தி பல் மருத்துவ நிறுவனத்தில் சிறப்பு பிரிவு முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு 

மகாத்மா காந்தி பல் மருத்துவ நிறுவனத்தில் சிறப்பு பிரிவு முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு 

புதுச்சேரி : கோரிமேடு மகாத்மா காந்தி முதுநிலை பல் மருத்துவ நிறுவனத்தில், வயது முதிர்ந்தவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பல் மருத்துவ பிரிவு விரைவில் துவங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:புதுச்சேரி, கோரிமேடு மகாத்மா காந்தி முதுநிலை பல் மருத்துவ நிறுவனத்தில் வயது முதிர்ந்தவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பல் மருத்துவ பிரிவு விரைவில் துவங்கப்படயுள்ளது.இப்பிரிவில் வயது முதிர்ந்தவர்கள் மற்றும் மாற்றுத்திறன்களுக்கு ஒரே இடத்தில் அனைத்து விதமான பல் மருத்துவ சிகிச்சைகளும் வழங்கப்படும். இந்த சிறப்பு பல் மருத்துவ பிரிவு அனைத்து வேலை நாட்களிலும் காலை 8;00 மணி முதல் மதியம் 12:30 மணி வரை செயல்படும்.இதனை புதுச்சேரி மற்றும் தமிழக பகுதியைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்