உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவர் கைது

வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவர் கைது

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே ஆவினில் வேலை வாங்கித் தருவதாக கூலித் தொழிலாளியிடம் 4 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் மாவட்டம், கெடார் அடுத்த அரியலுார் திருக்கையைச் சேர்ந்தவர் சுரேஷ், 36: கார் டிரைவர். அதே ஊரைச் சேர்ந்தவர் விசு, 30; கூலித்தொழிலாளி. இருவரும் நண்பர்கள்.விசுவிடம் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு, 'நான் ஆவின் நிறுவனத்தில் அதிகாரிளுக்கு டிரைவராக பணிபுரிந்து வருகிறேன். எனக்கு அதிகாரிகளை தெரியும். ஆவினில் வேலை வாங்கித் தருகிறேன் என, சுரேஷ் கூறி, 4 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார். பணம் பெற்ற பிறகு பலமுறை வேலை கேட்டும் வேலை வாங்கி தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.இது பற்றி, கெடார் போலீசில் விசு அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து சுரேைஷ கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ