உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பெயிண்டரை கத்தியால் வெட்டியவர் மீது வழக்கு

பெயிண்டரை கத்தியால் வெட்டியவர் மீது வழக்கு

புதுச்சேரி: முதலியார்பேட்டை, அனிதா நகரை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி, 36; பெயிண்டர். இவரை நேற்று முன்தினம் அப்பகுதியை சேர்ந்த விஜய், மொபைலில் தொடர்பு கொண்டு, ஜிபே மூலம் பணம் அனுப்பும்படி கேட்டுள்ளார். ஆனால், ஆரோக்கியசாமி பணம் அனுப்பவில்லை. இந்நிலையில், அன்று இரவு வீட்டின் அருகே ஆரோக்கியசாமி நின்றிருந்தபோது, அங்கு வந்த விஜய் பணம் கேட்டதற்கு, ஏன் அனுப்பவில்லை என கேட்டு தகராறில் ஈடுபட்டதுடன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை வெட்டினார். ஆரோக்கியசாமியின் சத்தம் கேட்டு, மக்கள் அங்கு திரண்டதால், விஜய் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். காயமடைந்த ஆரோக்கியசாமி புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார். அவரது புகாரின் பேரில், விஜய் மீது முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை