உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாஜி நர்சிடம் தாலி செயின் பறிப்பு காஞ்சிபுரத்தை சேர்ந்த நபர் கைது

மாஜி நர்சிடம் தாலி செயின் பறிப்பு காஞ்சிபுரத்தை சேர்ந்த நபர் கைது

அரியாங்குப்பம்: ஓய்வு பெற்ற செவிலியரிடம் தாலி செயின் பறித்து சென்ற, காஞ்சிபுரத்தை சேர்ந்த நபரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி, தவளக்குப்பம் ஆனந்தா நகரை சேர்ந்தவர் இளங்கோவன் மனைவி எழிலரசி, 59; ஓய்வு பெற்ற செவிலியர். கடந்த 13ம் தேதி, வீட்டில் இருந்து கடையில், பொருட்கள் வாங்க, தவளக்குப்பம் சந்திப்பு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அவரது பின்னால் பைக்கில் வந்தவர், திடீரென அவரது கழுத்தில் இருந்த இரண்டரை சவரன் தாலி செயினை பறித்து சென்றார். புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து, இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப் இன்ஸ்பெக்டர் ஜெயகுருநாதன் ஆகியோர் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி., கேமராவை ஆய்வு செய்து, விசாரணை நடத்தினர். குற்றவாளி, மரப்பாலம் அருகில் உள்ள பாரில், மது வாங்கி, அதற்கு ஜி.பே., மூலம் பணம் செலுத்தினார். அந்த மொபைல் போன் எண்ணின் முகவரியை கொண்டு விசாரித்தில், அவர் காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் என, தெரியவந்தது.அதையடுத்து, போலீசார் அவரை கண்டுபிடித்து, கைது செய்து, போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர். விசாரணையில் அவர், காஞ்சிபுரம் அடுத்த படப்பை, சார மங்கலம் கிராமத்தை சேர்ந்த பெருமாள் (எ) கமல், 44; என்பதும், இவர், தவளக்குப்பம் இன்ஜினியர் ஒருவரிடம் வீட்டிற்கு மாடூலர் கிச்சன் அமைக்கும் வேலை செய்து வந்தார். வேலை இல்லாமல் இருந்ததால், பள்ளியில் படிக்கும் தனது குழந்தைகளுக்கு பீஸ் கட்ட முடியாமல் வறுமையில், செயினை பறித்து சென்றது தெரியவந்தது. பறித்து சென்ற செயினை, சென்னையில் உள்ள பிரபல நகை கடையில், கொடுத்து, உருக்கி, தோடு, கம்பல், சிறிய அளவில் செயின் செய்து, அந்த நகைகளை அடகு கடையில் விற்று பணம் வாங்கியது தெரியவந்தது. அவர் மீது, போலீசார் வழக்கு பதிந்து, கைது செய்தனர். அவரிடமிருந்து நகைகள் மற்றும் பைக், மொபைல் போனை பறிமுதல் செய்தனர். அவரை, நேற்று கோர்ட்டில், ஆஜர்ப்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !