மனைவியை கத்தியால் குத்திய கணவருக்கு வலை
காரைக்கால்: காரைக்கால் நெடுங்காட்டில் குடும்பத் தகராறில் மனைவியை கத்தியால் வெட்டிய கணவரை போலீசார் தேடிவருகின்றனர். காரைக்கால் நெடுங்காடு குறும்பகரம் கன்னிக்கோவில் தெருவைச் சேர்ந்த பாபு, 33; கூலி தொழிலாளி. இவரது மனைவி வினோதா, 32; கணவன்,மனைவி இருவருக்கு நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பாபு, வினோதாவை காய்கறி வெட்டும் கத்தியால் அவரது வயிற்றில் குத்தினார். இதில் காயமடைந்த வினோதா அரசு மருந்துவமனையில் சேர்த்தனர். வினோதா புகாரின் பேரில் நெடுங்காடு போலீசார் பாபு மீது வழக்கு பதிவு செய்து தேடிவருகின்றனர்.