உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மணக்குள விநாயகர் தங்கத் தேரில் வீதியுலா

மணக்குள விநாயகர் தங்கத் தேரில் வீதியுலா

புதுச்சேரி : புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் வரும் அக்டோபர் 1ம் தேதி தங்கத்தேரில் சுவாமி வீதியுலா நடக்கிறது. புதுச்சேரி, மணக்குள விநாயகர் கோவிலில் ஆண்டிற்கு ஒரு முறை விநாயகர் தங்கத் தேரில் எழுந்தருள செய்து, வீதியுலா நடப்பது வழக்கம். அதன்படி, இந்தாண்டு வரும் அக்டோபர் 1ம் தேதி விஜயதசமியை முன்னிட்டு, அன்று காலை விநாயகருக்கு அபிேஷகம், சிறப்பு பூஜை நடக்கிறது. அன்று மாலை 6:30 மணியளவில் விநாயகர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் தங்கத் தேரில் எழுந்தருளி வீதியுலா நடக்கிறது. விழா, ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை