உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மன் கீ பாத் நிகழ்ச்சி 25ம் தேதி ஒலிபரப்பு

மன் கீ பாத் நிகழ்ச்சி 25ம் தேதி ஒலிபரப்பு

புதுச்சேரி: பிரதமர் மோடி நாட்டு மக்களுடன் ரேடியோ மூலம் உரையாடும் மன் கீ பாத் நிகழ்ச்சி வரும் 25ம் தேதி ஒலிபரப்பாகிறது என, அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அகில இந்திய வானொலி நிகழ்ச்சிப் பிரிவு தலைவர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பிரதமர் நரேந்திரமோடி ரேடியோ மூலம் நாட்டு மக்களிடம் உரையாடும் மன் கீ பாத் நிகழ்ச்சி வரும் 25ம் தேதி காலை 11:00 மணிக்கு ஒலிபரப்பாகிறது. இதனை தொடர்ந்து, மன் கீ பாத் நிகழ்ச்சியின் தமிழ் மொழி பெயர்ப்பு ஒலிபரப்பாகிறது. மீண்டும் தமிழ் மொழி பெயர்ப்பு அன்றிரவு 8:00 மணிக்கு ஒலிபரப்பாகும். இந்த இரண்டு நிகழ்ச்சிகளும், புதுச்சேரி அகில இந்திய வானொலியின் மத்திய அலை 1215 கிலோ ஹெர்ட்ஸ் மற்றும் ரெயின்போ பண்பலை 102.8 மெகாெஹர்ட்ஸ் அலைவரிசைகளில் ஒலிபரப்பாகும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ