உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரூ.10 நாணயத்திற்கு பிரியாணி விளம்பரத்தால் பலர் பாதிப்பு

ரூ.10 நாணயத்திற்கு பிரியாணி விளம்பரத்தால் பலர் பாதிப்பு

புதுச்சேரி:புதுச்சேரியில், பா.ஜ., பிரமுகர் ஒருவர், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகம் எதிரில், லெபர்தனே வீதியில் புதிய ேஹாட்டல் திறந்துள்ளார். '10 ரூபாய் நாணயம் கொடுத்தால், முட்டையுடன் ஒரு சிக்கன் பிரியாணி வழங்கப்படும்' என, அறிவித்தார்.இதை அறிந்த நுாற்றுக்கணக்கான மக்கள் பிரியாணி வாங்க, 10 ரூபாய் நாணயத்துடன் குவிந்து, 500 மீட்டருக்கு வரிசையில் காத்திருந்தனர். இந்நிலையில், பகல் 12:00 மணிக்கு பிரியாணி கொடுக்க ஆரம்பித்தனர். கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.மேலும், 15 நிமிடங்களில் பிரியாணி தீர்ந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. 200 பேருக்கு மட்டுமே பிரியாணி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் வரிசையில் காத்திருந்த நுாற்றுக்கணக்கானோர் ேஹாட்டலை முற்றுகையிட்டு ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.ஊழியர்கள் ேஹாட்டல் ஷட்டர்களை மூடி விட்டு உள்ளே சென்று விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை