மேலும் செய்திகள்
புகார் பெட்டி
02-Sep-2024
புதுச்சேரி: மரப்பாலம் - முருங்கப்பாக்கம் சாலை உட்பட ரூ. 7.03 கோடி மதிப்பில் சாலை வாய்க்கால் மேம்படுத்தும் பணிகளை முதல்வர் ரங்கசாமி பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.அரியாங்குப்பம் தொகுதியில், ரூ. 2.58 கோடி மதிப்பில் வடிகால் வாய்க்கால், மரப்பாலம் முதல் தேங்காய்திட்டு மேட்டுத்தெரு வரை ரூ.2.20 கோடி மதிப்பில் சாலை, மரப்பாலம் சந்திப்பு முதல் முருங்கப்பாக்கம் சந்திப்பு வரை ரூ.2.25 கோடி மதிப்பில் சாலையின் இருபக்கம் 'யு' வடிவ வாய்க்கால், மின்கம்பங்களை அகற்றி புதைவட கேபிள் பதித்து, சாலையை மேம்படுத்தப்பட உள்ளது. இப்பணிகளை முதல்வர் ரங்கசாமி நேற்று பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில், அமைச்சர் லட்சுமிநாராயணன், எம்.எல்.ஏ.,க்கள் பாஸ்கர், சம்பத், தலைமை பொறியாளர் தீனதயாளன், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் வீரசெல்வம், நெடுஞ்சாலை பிரிவு செயற்பொறியாளர் பாலசுப்ரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கடலுார் சாலையில் மரப்பாலம் - முருங்கப்பாக்கம் இடையிலான பகுதி மிகவும் குறுகலாக உள்ளதால், நாள் முழுதும் கடும் 'டிராபிக் ஜாம்' ஏற்படுகிறது. சாலை விரிவாக்கத்திற்கு சாலையோர மக்கள் தங்களின் இடங்களை அளிக்க சம்பத் எம்.எல்.ஏ., தலைமையில் நடந்த கூட்டத்தில் ஒப்புதல் அளித்து, அதற்கான கடிதத்தையும் அரசிடம் சமர்பித்துள்ளனர். ஆனால், தற்போது சாலை மேம்படுத்தும் பணி துவங்கியுள்ளது.இதுகுறித்து சம்பத் எம்.எல்.ஏ.,விடம் கேட்டபோது; சாலை விரிவாக்கம் செய்ய அப்பகுதி மக்கள் 6 அடி நிலத்தை தர ஒப்புதல் கடிதம் பொதுப்பணித்துறைக்கு அளித்து விட்டோம். வருவாய்த்துறை நிலம் எடுக்கும் பணியை துவக்கி உள்ளது. இப்பணியை விரைந்து முடித்து சாலையை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
02-Sep-2024