ஆரோவிலில் மார்கழி உற்சவம் துவக்கம்
வானுார் : ஆரோவில்லில் மார்கழி உற்சவம் துவக்க விழா நடந்தது.ஒற்றுமை மண்டபத்தில் நேற்று முன்தினம் நடந்த உற்சவ துவக்க விழாவில், சமஸ்கிருது அறிஞர் டாக்டர் ராஜலட்சுமி சீனிவாசன், ஆண்டாள் நாச்சியார் அருளிய திருப்பாவை பாசுரங்கள் பாடி, அதிலுள்ள அர்த்தங்கள், சிறப்புகள், ஆன்மிக மற்றும் கலாசார முக்கியத்துவம் குறித்து பேசினார்.நிகழ்ச்சியில் ஆரோவிலில் உள்ள பள்ளி மாணவர்கள் திருப்பாவை பாடல்களை பாடினர். பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.