திருமண உதவித்தொகை ஊசுடு எம்.எல்.ஏ., வழங்கல்
வில்லியனுார்: ஊசுடு தொகுதி பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகைக்கான நிதியை கார்த்திகேயன் எம்.எல்.ஏ., வழங்கினார். புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை சார்பில் ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ், ஊசுடு தொகுதியை சேர்ந்த 18 பயனாளிகளுக்கு ரூ.6 லட்சமும், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் திருமண நிதியுதவித் தொகை திட்டத்தின் கீழ் 8 பயனாளிகளுக்கு ரூ.8 லட்சம் என மொத்தம் 26 பயனாளிகளுக்கு ரூ.14 லட்சம் நிதியுதவிகளை கார்த்திகேயன் எம்.எல்.ஏ., நேற்று வழங்கினார். நிழ்ச்சியில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அதிகாரிகள், ஊசுடு தொகுதி காங்., நிர்வாகிகள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.