உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கோமாதா கோவிலில் மாட்டுப்பொங்கல் விழா

கோமாதா கோவிலில் மாட்டுப்பொங்கல் விழா

புதுச்சேரி : கருவடிக்குப்பம் கோமாதா கோவிலில் நடந்த மாட்டுப்பொங்கல் விழாவில், பசுக்கள், காளைகள் அலங்கரிக்கப்பட்டு, மாடவீதிகளில் ஊர்வலம் நடந்தது.கருவடிக்குப்பம், இடையான்சாவடி சாலை, வேதாஸ்ரம குருகுலத்தில், கோமாதா கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாட்டுப்பொங்கலையொட்டி, பல்வேறு சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இந்தாண்டு மாட்டுப்பொங்கல் விழாவையொட்டி, கோவிலில் உள்ளபசுக்கள், காளைகள் மற்றும் குதிரைகளுக்கு நேற்று ராஜா சாஸ்திரி தலைமையில் சிறப்பு பூஜைகள் நடந்தன.மேலும், கோமாதா கோவிலில், 64 வகையிலான காய்கறிகள், பழ வகைகள் வைத்து பூஜை செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து, அந்த காய், கனி வகைகள் அனைத்தும்பசுக்கள், காளைகள், குதிரைகளுக்கு வழங்கப்பட்டன.அதற்கு பிறகு, அவை அழகிய முறையில் அலங்கரிக்கப்பட்டு, மாட வீதிகளில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டன. விழாவில் பல்வேறு சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன.இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று, வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை