உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு மருத்துவமனையில் மருத்துவ கருத்தரங்கம்

அரசு மருத்துவமனையில் மருத்துவ கருத்தரங்கம்

புதுச்சேரி : புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவமனை காது, மூக்கு, தொண்டை துறை சார்பில், மயக்கத்திற்கான தீர்வு காண மறுவாழ்வு சிகிச்சை செயல்முறைகள் பற்றிய மருத்துவ கருத்தரங்கம் நடந்தது.மருத்துவ கண்காணிப்பாளர் செவ்வேள், உள்ளி ருப்பு மருத்துவ அதிகாரி ஷமிமுனிசா பேகம், குறை தீர்வு அதிகாரி ரவி ஆகியோர் துவக்கி வைத்தனர். கருத்தரங்கில், அரசு மருத்துவக் கல்லுாரியில் பயிலும் முதுகலை மாணவர்கள் மற்றும் பல்வேறு கல்லுாரிகளில் இருந்து காது, மூக்கு, தொண்டை துறை முதுகலை மருத்துவர்கள, நரம்பியல் துறை மாணவர்களுக்கு, வெர்டோகா சிகிச்சை தொடர்பாக பயிற்சி அளிக்கப்பட்டது.நிகழ்ச்சியில், மருத்துவமனை காது, மூக்கு, தொண்டை துறை தலைவர் ஸ்டாலின், சிவகுருநாதன் உட்பட மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை