உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தொடர் மருத்துவ கருத்தரங்கம்

தொடர் மருத்துவ கருத்தரங்கம்

புதுச்சேரி : புனித சூசையப்பர் மருத்துவமனை(குளூனி) சார்பில் 163-வது தொடர் மருத்துவ கருத்தரங்கம் நடந்தது.திட்ட இயக்குநர் ரங்கநாத் வரவேற்றார்.சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஜிப்மர் மகப்பேறு துறை தலைவர் கவுரி துரைராஜன் பேசியதாவது: உலகம் அதிவேகமாக மாறி வருகிறது. அதற்கேற்ப மருத்துவ உலகமும் மாற்றங்களை கண்டு வருகிறது. குறிப்பாக மகப்பேறு மருத்துவம் அதிவேகமாக மாற்றம் கண்டுள்ளது. தாய் இறப்பு விகிதத்தை குறைப்பத்தில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. கருவில் ஆரம்பம் முதல் இறுதி வரையிலான குழந்தை வளர்ச்சி ஸ்கேன் செயல்படுகிறது. இதேபோல் கர்ப்ப காலத்தில் ஏற்படும் மருத்துவ பிரச்னைகளின் வகைகளும் மாறி வருகின்றன' என்றார்.தொடர்ந்து நடந்த மருத்துவ கருதரங்கில் குளூனி மருத்துவமனை, அரசு மருத்துவமனை, ராஜிவ்காந்தி குழந்தைகள் மருத்துவமனை, அறுபடை வீடு மருத்துவ கல்லுாரி உள்பட பல்வேறு மருத்துவமனையை சேர்ந்த டாக்டர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.மகப்பேறு மருத்துவம் தொடர்பாக டாக்டர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. சிறப்பு விருந்தினர் ஜிப்மர் மருத்துவமனை மகப்பேறு துறை தலைவர் கவுரி துரைராஜனுக்கு டாக்டர் கஸ்துாரி நினைவு பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் டாக்டர்கள் மீனா ராமநாதன், வாசுதேவன் உள்பட பலர் பங்கேற்றனர். திட்ட இயக்குநர் ரங்கநாத் கந்தசாமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை