உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மருத்துவ மாணவர் கடலில் தற்கொலை

மருத்துவ மாணவர் கடலில் தற்கொலை

புதுச்சேரி:புதுச்சேரியில்எம்.பி.பி.எஸ்., இறுதியாண்டு மாணவர் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.புதுச்சேரி கடற்கரை அம்பேத்கர் மணிமண்டபம் எதிரே நேற்று முன்தினம் காலை 10:00 மணிக்கு, வாலிபர் உடல் கரை ஒதுங்கியது. தகவலறிந்த பெரியகடை போலீசார் சென்று, வாலிபர் உடலை மீட்டு விசாரித்தனர். கடலுார் மஞ்சக்குப்பம், ஆல்பேட்டை காமராஜர் நகரைச் சேர்ந்த கவுதமன் மகன் நிதிஷ், 23; என்பதும், பிள்ளையார்குப்பம் மகாத்மா காந்தி மருத்துவக் கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., இறுதியாண்டு படித்த நிதிஷ் என்பது தெரிந்தது. பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அவருக்கு நேற்று முன் தினம், தேர்வு நடந்தது. அதற்காக வழக்கம்போல் காலை 7:45 மணிக்கு வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார். அவரது கல்லுாரி பை, அம்பேத்கர் மணிமண்டபம் அருகே உள்ள உணவகத்தில் கிடந்தது. தேர்வு பயத்தில் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை