உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  ஆரம்ப சுகாதார நிலையத்தில் மழை நீர் கசிவால் மருந்துகள் சேதம் 

 ஆரம்ப சுகாதார நிலையத்தில் மழை நீர் கசிவால் மருந்துகள் சேதம் 

அரியாங்குப்பம்: ஆரம்ப சுகாதார நிலையத்தின் ஆயுர்வேதா மற்றும் ஹோமியோபதி பிரிவு கட்டடத்தில், மழைநீர் கசிவால் பூஞ்சைகள் படர்ந்து மருந்துகள் வீணாகி வருகின்றனர். அரியாங்குப்பத்தில், ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த வளாகத்தில் மருத்துவர்கள் குடியிருப்பு கட்டடம் இருக்கிறது. போதிய வசதிகள் இல் லாத காரணத்தால், பணி செய்யும் டாக்டர்கள் குடி யிருப்பில் தங்க முடியாமல் வெளியில் சென்றுள்ளனர். இதில், ஒரு கட்டடத் தில், ஆயுர்வேதா மற்றும் ஹோமி யோபதி மருத்துவ பிரிவும், மற்றோரு கட்டடத்தில், பிசியோதெரபி பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மழை பெய்யும் போது, ஆயுர்வேதா, ஹோமியோபதி பிரிவு கட்டடத்தில், தண்ணீர் கசிவு ஏற்படுகிறது. அதனால், பூஞ்சைகள் படர்ந்து, அறையில் இருக்கும் மருந்துகள் வீணாகி வருகிறது. பூஞ்சைகளில் இருந்து துர்நாற்றம் வீசுவதால், பணி செய்யும் டாக்டர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். அதே போன்று, பிசியோ தெரபி பிரிவு இயங்கும் கட்டடத்தில், இதே பிரச்னைகள் உள்ளது.இது தொடர்பாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு, பாஸ்கர் எம்.எல்.ஏ., பார்வையிட்டு நடவடிக்கை எடுப்பதாக கூறினார். எனவே சுகாதாரத்துறை அதிகாரிகள் சீரமைக்கும் பணியை உடனடியாக செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ