மேலும் செய்திகள்
உலக மனநல விழிப்புணர்வு
10-Oct-2026
புதுச்சேரி: அரியாங்குப்பம் மணவெளி அரிச்சுவடி மனநல மையம் சார்பில், 16ம் ஆண்டு உலக மனநல விழிப்புணர்வு விழா நடந்தது. அரிச்சுவடி மனநல இயக்குனர் இளவழகன் வரவேற்றார். விழாவினை மாவட்ட நீதிபதி சித்தார்த்தர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். ஆத்திச்சூடி சிறப்பு பள்ளி தாளாளர் சத்தியவண்ணன், அரசம்பாதேவி ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக அமைச்சர் ராஜவேலு, ராமு எம்.எல்.ஏ., ஆகியோர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். டாக்டர்கள் அசோகன், அரவிந்தன், சத்தியவண்ணன், விஜயகுமார், கலையரசி, கலைச்சந்திரன், ரோட்டரி கிளப் ஆப் அரிக்கன்மேடு போர்ட் தலைவர் ராமச்சந்திரன், சதீஷ்குமார், வெண்ணிலா, முத்துகாமாட்சி, குமார், தயாவதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
10-Oct-2026