உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  எம்.ஜி.எம்., ஹெல்த்கேர் மருத்துவமனை மருத்துவர் நாளை புதுச்சேரி வருகை

 எம்.ஜி.எம்., ஹெல்த்கேர் மருத்துவமனை மருத்துவர் நாளை புதுச்சேரி வருகை

புதுச்சேரி: சென்னை எம்.ஜி.எம்., ஹெல்த்கேர், மலர் அடையார் மருத்துவமனையின் இதய அறுவை சிகிச்சை நிபுணர், நாளை புதுச்சேரியில் மருத்துவ ஆலோசனை வழங்குகிறார். புதுச்சேரி, எண் 35 திருவள்ளுவர் சாலை, பிள்ளைத்தோட்டத்தில், எம்.ஜி.எம்., தகவல் மையம் உள்ளது. இங்கு, சென்னை எம்.ஜி.எம்., ஹெல்த்கேர், மலர் அடையார் மருத்துவமனையில் இருந்து இதய அறுவை சிகிச்சை நிபுணர் சஞ்சய் தியோடர், நாளை (22ம் தேதி) காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை ஆலோசனை வழங்குகிறார். அதில் கரோனரி ஆர்டரி பைபாஸ், கிராப்டிங் (சி.ஏ.பி.ஜி), வால்வு மற்றும் அறுவை சிகிச்சை, வால்வு மறுசீரமைப்பு, குறைந்தபட்ச ஊடுருவல் கொண்ட இதய அறுவை சிகிச்சை, பெருநாடி அறுவை சிகிச்சைகள், மார்மறை (தொராசிக்) அறுவை சிகிச்சை, மீள் அறுவை சிகிச்சை, குழந்தைகளுக்கான இதய அறுவை சிகிச்சை உள்ளிட்ட இதய நோய் பிரச்னை தொடர்பாக, ஆலோசனை வழங்குகிறார். மேலும், 8526617199, 9384663791 ஆகிய மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு, அவசியம் முன்பதிவு செய்யவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்