மலை ஏறும் வீராங்கனைக்கு அமைச்சர் நிதியுதவி
திருக்கனுார் : புதுச்சேரி மலை ஏறும் வீராங்கனைக்கு, அமைச்சர் நமச்சிவாயம் நிதி வழங்கினார்.மண்ணாடிப்பட்டு தொகுதி, கூனிச்சம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் திவ்யா, மத்திய அரசின் பனிமலை மற்றும் பாறை ஏற்றம் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றார். திவ்யா தற்போது ரஷ்யாவில் உள்ள 5,642 மீட்டர் உயரமுள்ள எள்பிரஸ் மலை, கார்கிலில் உள்ள 7,135 மீட்டர் உயரமுள்ள நன்மலை, 7,077 மீட்டர் உயரமுள்ள குன்மலை ஆகியவற்றை தொடர்ச்சியாக ஏறி சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார்.இதையொட்டி, புதுச்சேரியை சார்ந்த முதல் மலை ஏறும் வீராங்கனையான திவ்யாவை ஊக்குவிக்கும் வகையில், அவருக்கு மலை ஏற்றத்திற்கான பயண செலவாக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரம் இயக்குநரகத்தின் மூலம் ரூ.2 லட்சம் நிதியுதவியை அமைச்சர் நமச்சிவாயம், வழங்கினார்.