உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  போர்வெல் அமைக்கும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

 போர்வெல் அமைக்கும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

புதுச்சேரி: முதலியார்பேட்டை தொகுதி சுதானா நகர், நைனார்மண்டபத்தில் குடிநீர் பற்றாக்குறையை போக்க புதிய போர்வெல் அமைக்கும் பணியினை சம்பத் எம்.எல்.ஏ., பூஜை செய்து துவக்கி வைத்தார். புதுச்சேரி பொதுப்பணித்துறை, பொது சுகாதாரக் கோட்டம், குடிநீர் பிரிவு சார்பில், முதலியார்பேட்டை தொகுதி, சுதானா நகர் மற்றும் நைனார்மண்டபம் பகுதிகளில் நிலவிவரும் குடிநீர் பற்றாக்குறையை போக்க நைனார்மண்டபம், பாண்டியன் தெருவில் ரூ. 22.85 லட்சம் மதிப்பில் புதிய போர்வெல் அமைக்கும் பணி துவக்க விழா நடந்தது. சம்பத் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். தலைமைப் பொறியாளர் வீரசெல்வம், கண்காணிப்பு பொறியாளர் சுந்தரமூர்த்தி, இளநிலைப் பொறியாளர் கோபாலகிருஷ்ணன் உட்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை