போர்வெல் அமைக்கும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
திருபுவனை: கலிதீர்த்தாள்குப்பத்தில் ரூ.38.65 லட்சம் செலவில் புதிய ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணியை அங்காளன் எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார். புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறை, பொது சுகாதாரக் கோட்டத்தின் சார்பில் திருபுவனை தொகுதி, கலிதீர்த்தாள்குப்பம் மற்றும் அதனை சார்ந்த பகுதி மக்களின் குடிநீர் பற்றாக் குறையைப் போக்க, ஜெ.எம்.ஜெ., கார்டன் பகுதியில் ரூ.38.65 லட்சம் செலவில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடந்தது. அங்காளன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் வீரசெல்வம், கண்காணிப்பு பொறியாளர் சுந்தர மூர்த்தி, பொது சுகாதாரக்கோட்ட செயற்பொறியாளர் ப க்தவச்சலம், கிராம குடிநீர் திட்ட உதவிப்பொறியாளர் சிவானந்தம், இளநிலைப் பொறியாளர் கார்த்திக், மண்ணாடிப்பட்டு ஆணையர் எழில்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவிப்பொறியாளர் மல்லிகார்ஜூனன், இளநிலைப் பொறியாளர்கள் பாஸ்கர், மனோகரன், லட்சிய ஜனநாயக கட்சியின் திருபுவனை தொகுதி தலைவர் ரவிக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.