உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சிமென்ட் சாலை, வாய்க்கால் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

சிமென்ட் சாலை, வாய்க்கால் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

புதுச்சேரி : உருளையான்பேட்டை தொகுதி இளங்கோ நகர் வார்டு பகுதியில் சிமென்ட் சாலை மற்றும் கான்கிரீட் வாய்க்கால் அமைக்கும் பணியினை நேரு எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.புதுச்சேரி நகராட்சி சார்பில், உருளையன்பேட்டை தொகுதி, இளங்கோ நகர் வார்டு, சாந்தி நகர் மெயின் ரோடு மற்றும் சாந்தி நகர் முதல் குறுக்கு வீதி பகுதிகளில் உள்ள பழைய சிமென்ட் சாலையினை மாற்றி புதிய சிமென்ட் சாலை மற்றும் இருபுறம் கான்கிரீட் வாய்க்கால் அமைக்கும் பணி தொகுதி எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதி ரூ. 42 லட்சம் செலவில் மேற்கொள்ளப்பட உள்ளது. இப்பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் நேரு எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பணியினை துவக்கி வைத்தார்.புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி, நகராட்சி செயற்பொறியாளர் சிவபாலன், உதவி பொறியாளர் நமச்சிவாயம், இளநிலை பொறியாளர் குப்புசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !