உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இலவச மருத்துவ முகாம் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

இலவச மருத்துவ முகாம் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

புதுச்சேரி: புதுச்சேரி புதிய பஸ் நிலையத்தில் நடந்த இலவச மருத்துவ முகாமை, நேரு எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். அனைத்து தனியார் ஓட்டுநர்கள் நலச்சங்கம் மற்றும் அரியூர் தனியார் மருத்துவ கல்லுாரி, மருத்துவமனை இணைந்து புதிய பஸ் நிலையத்தில், இலவச மருத்துவ முகாம் நடத்தின. நேரு எம்.எல்.ஏ., முகாமை துவக்கி வைத்தார். முன்னதாக, அவர், உருளையான்பேட்டை தொகுதிக்குட்பட்ட கோவிந்தசாலை, குபேர் நகரில், புதியதாக கட்டப்பட்டு வரும், அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியில், புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி, உருளையன்பேட்டை இன்ஸ்பெக்டர் கந்தசாமி, சங்க தலைவர் கோவிந்தராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். காது, தொண்டை, மூக்கு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு பரிசோதனை செய்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !