உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கூடப்பாக்கத்தில் சாலை பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

கூடப்பாக்கத்தில் சாலை பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

வில்லியனுார் : ஊசுடு தொகுதியில் சாலை பணிகளை எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில், ரூ. 44. 70 லட்சம் மதிப்பில் ஊசுடு தொகுதி அகரம் சக்தி நகர், ஆசை நகர் மற்றும் கூடப்பாக்கம் ஆனந்தா நகரில் சாலை அமைக்கப்பட உள்ளது. கரசூர் யோகலட்சுமி நகரில் புதுச்சேரி நகர வளர்ச்சி நிதியின் கீழ் சிமென்ட் சாலை அமைக்கப்பட உள்ளது. இப்பணிகளை, சாய்சரவணன்குமார் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் வில்லியனுார் கொம்யூன் உதவி பொறியாளர் எலன் சர்மிளாநாதன், இளநிலை பொறியாளர் பிரதீப்குமார், தொகுதி ஒருங்கிணைப்பாளர் சாய்தியாகராஜன், தொகுதி பா.ஜ நிர்வாகிகள் முத்தாலுமுரளி, மல்லிகா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை