சமுதாய நலக்கூடத்தை எம்.எல்.ஏ., ஆய்வு
புதுச்சேரி : உருளையான்பேட்டை தொகுதியில் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் கட்டப்பட்ட சமுதாயநலக்கூடத்தை நேரு எம்.எல்.ஏ., துறை இயக்குனர் இளங்கோவனுடன் சென்று ஆய்வு செய்தார்.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம், உருளையன்பேட்டை தொகுதி ராஜா நகர் பகுதியில், சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டுள்ளது. இதில், மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, டேபிள், சேர், சமையல் உபகரணங்கள் வாங்கி சமுதாய நலக்கூடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, நேரு எம்.எல்.ஏ., ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் இளங்கோவனிடம் கோரிக்கை வைத்திருந்தார். அதையடுத்து நேரு எம்.எல்.ஏ., துறை இயக்குனர் இளங்கோவனுடன் சமுதாய நலக்கூடம் சென்று ஆய்வு செய்தனர்.