உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / முதல்வருக்கு பலாப்பழம் வழங்கிய எம்.எல்.ஏ.,

முதல்வருக்கு பலாப்பழம் வழங்கிய எம்.எல்.ஏ.,

புதுச்சேரி; காலாப்பட்டு தொகுதி எம்.எல்.ஏ., கல்யாண சுந்தரம் தனது தோட்டத்தில் விளைந்த பலாப்பழத்தை முதல்வர் ரங்கசாமிக்கு பரிசாக வழங்கினார்.காலாப்பட்டு தொகுதி எம்.எல்.ஏ., கல்யாணசுந்தரம், கனகசெட்டிக்குளத்தில் உள்ள தனது விவசாய நிலத்தில் விளையும் பலாப்பழங்களை ஆண்டு தோறும், முதல்வர், அமைச்சர், எம்.எல்.ஏ., களுக்கு பரிசாக வழங்கி வருவது வழக்கம்.அதன்படி, இந்தாண்டு பலாப்பழம் அறுவடை துவங்கியுள்ளதால், தனது நிலத்தில் விளைந்த பலாப்பழங்களை பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான நேற்று மினி வேன் மூலம் சட்டசபை வளாகத்திற்கு கொண்டு வந்தார்.பின்னர், முதல்வர் ரங்கசாமிக்கு பலாப்பழங்களை பரிசாக வழங்கினார். தொடர்ந்து, சபாநாயகர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ., க்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலருக்கும் பலாப்பழங்கள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை