உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பொங்கல் பண்டிகைக்கு முன் வேட்டி, சேலைக்கான பணம்; ஆதிதிராவிடர் நலத் துறை தீவிரம்

பொங்கல் பண்டிகைக்கு முன் வேட்டி, சேலைக்கான பணம்; ஆதிதிராவிடர் நலத் துறை தீவிரம்

புதுச்சேரி : பொங்கல் பண்டிகைக்கு முன் இலவச வேட்டி, சேலைக்கான 1000 ரூபாயை வங்கி கணக்கில் செலுத்துவதற்கான ஏற்பாடுகளை ஆதிதிராவிடர் நலத் துறை தீவிரமாக செய்து வருகிறது.புதுச்சேரி அரசின் ஆதிதிராவிடர் நலத் துறை சார்பில், தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையின்போது 18 வயது பூர்த்தியடைந்த அனைத்து பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு இலவச வேட்டி, சேலை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.அதன்படி, ஆண்களுக்கு வேட்டி அல்லது லுங்கி, ஒரு பாலிஸ்டர் சட்டை, பெண்களுக்கு பாலிஸ்டர் பிளவுஸ், சேலை வழங்கப்பட்டு வந்தது. நேரடி பண பரிமாற்ற திட்டத்தின் கீழ் கடந்த 2017ம் ஆண்டு முதல் வேட்டி, சேலைக்குப் பதில் 500 ரூபாய் வழங்கப்பட்டது.விடுதலை நாள் விழாவில் பேசிய முதல்வர் ரங்கசாமி, வேட்டி சேலைக்கான 500 ரூபாயை 1,00௦ ஆக உயர்த்தி, அவர வர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என, அறிவித்தார்.முதல்வர் உத்தரவின்பேரில், பொங்கல் பண்டிக்கை முன்பாக வேட்டி, சேலைக்கான பணம் தலா 1,000 ரூபாய் வீதம் பயனாளிகள் வங்கி கணக்கில் செலுத்த ஆதிதிராவிடர் நலத் துறை தயாராகி வருகிறது. துறை இயக்குனர் இளங்கோவன் தலைமையில் பணிகள் முழு வீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளது.இதில் புதுச்சேரியில் 98,694 பேரும், காரைக்கால்-23,392, ஏனாம்-5542 என, மொத்தம் 1,27,628 பேர் பயனடைய உள்ளனர். இதன் மூலம் ஆதிதிராவிடர் நலத் துறைக்கு 12 கோடியே 76 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் செலவாகும். மாகியில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் இல்லை என்பதால் இத்திட்டம் செயல்படுத்தப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்