உள்ளூர் செய்திகள்

 மொபட் திருட்டு

அரியாங்குப்பம்: கோவில் வெளியில் நிறுத்திருந்த மொபட்டை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். அரியாங்குப்பம் டோல்கேட் பகுதியை சேர்ந்தவர் மலையாளத்தான், 69. இவர், அருகில் உள்ள ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு கடந்த 18ம் தேதி தனது மொபட்டில் (பி.ஒ.01, டி.ஏ.0462) சென்றார். மொபைட்டை, கோவில் வாசல் முன் நிறுத்தி விட்டு, பூஜையில் கலந்து கொண்டார். பின், திரும்பி வந்து பார்த்த போது, மொபைட்டை காணவில்லை. புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, மொபைட்டை திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !