மகளுடன் தாய் மாயம்
புதுச்சேரி: மகளுடன் தாய் மாயமானது குறித்து ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். ரெட்டியார்பாளையம் லாம்பெர்ட் சரவணன் நகரை சேர்ந்தவர், ஏழுமலை மனைவி தமகேஷ்வரி,27; இவர் கடந்த 29ம் தேதி தனது மகள் வாணிஸ்ரீ,7; என்பவருடன் வீட்டை விட்டு சென்றவர் மீண்டும் திரும்பிவரவில்லை. இது குறித்து அவரது கணவர் அளித்த புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இவரை பற்றி தகவல் தெரிந்தால், 0413–2292284 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.